தஞ்சாவூர் ஓவியப் பாணி என்பது தஞ்சை நாயக்கர் காலம் தொட்டு, தஞ்சை மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களினூடாகத் தமிழ் நாட்டில் வளர்ச்சியடைந்து வந்த ஓர் ஓவியக் கலைப் பாணி ஆகும். பல்வேறுபட்ட காலகட்டங்களில் வளர்ந்து வந்த இப்பாணி, நாயக்கர்களின் ஆந்திரக் கலைப் பாணியினதும், மராட்டியர்களின் மராட்டிய மற்றும் முகலாய ஓவியப் பாணியினதும், ஆங்கிலேயரின் மேனாட்டுக் கலைப் பாணியினதும் தாக்கங்களைப் பெற்றது.
இந்தியக்கலை மரபில் ஓவியக்கலை பல்லாயிரம் ஆண்டுகளாய் வளர்ந்து செழித்து வரும் சிறப்பு வாய்ந்தது. ஆயிரம் ஆண்டு கால ஓவியங்களையும், பின்னாளில் தீட்டப்பெற்ற பல்வேறு வகையான ஓவியங்களை ஒருங்கே கொண்டு திகழும் ஒரே கோயில் தஞ்சைப் பெரிய கோயிலாகும். இக்கோயிலில் வளர்ந்த இக்கலை பின்னாளில் தஞ்சைப்பாணி ஓவியம் என்னும் ஒரு புதிய ஓவிய மரபை உலகுக்குத் தந்தது. அதுவே தஞ்சாவூர் ஓவியம் என்று தற்போது வழங்கப்படுகிறது.
எழுதியவர்: நிவேதிதா
Comments
Post a Comment