பாரம்பரிய மருத்துவ முறை என்பது பல நூற்றாண்டுகள் பழமையான நடைமுறைகளில் ஒன்றாகும் மற்றும் நோய்க்கு எதிராகப் போராடுவதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதற்கும் மனித வகைக்கு நீண்ட காலமாக சேவை செய்யும் தோழர்கள். இருப்பினும் நாம் இப்போது, பாரம்பரிய மருத்துவத்தை மறந்து நவீன மருத்துவ முறைக்கு மாறிவிட்டோம். இந்த முறையால் தற்காலிக தீர்வு தான் கிடைக்கும் என்று தெரிந்த போதிலும் பக்கவிளைவுகள் பற்றி சிறிதும் யோசிக்காமல் அதையே நாடிச் செல்கிறோம்.
அப்படி நாம் மறந்து போன சில இயற்கை பாரம்பரிய மருத்துவர்களின் பார்ப்போம். உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலைக்கு வந்து விட்டோம். நம் முன்னோர்களின் சராசரி ஆயுள் காலம் 80 முதல் 90 வரை என இருந்தது. ஆனால் இப்போது 60 வதை எட்டுவதே அரிதாகிவிட்டது.
பாரம்பரிய மருத்துவ முறைகளில் சில, சாப்பிட்டதும் அஜீரணம் ஏற்கப்பட்டால் சுக்கு, மல்லி, பனைவெல்லம் கலந்து சுக்கு காபி குடித்து வந்தால் அஜீரணம் குணமாகும்.வெந்தய கீரை இரும்பு சத்து உடையது, உடலுக்கு ஊக்கம் அளிக்கிறது. வயிற்றுப்புண் (அல்ஷர்) இருந்தால் இதைச் சாப்பிடலாம். கண்ணுக்கு மிகவும் நல்லது. எலுமிச்சம்பழச் சாறில் உள்ள பொட்டாசியம் சத்து இதய பிரச்சனைகளை தடுக்கும்.வாரத்துக்கு ஒரு முறை வாழைத்தண்டு சாறு பருகினால் வயிற்றில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். இன்னும் எத்தனையோ பல.
இந்த பாரம்பரிய முறையை நம்மில் பலரும் அறிந்திருப்பதே அரிது. இனி அடுத்த தலைமுறையினருக்கு இப்படி ஒரு முறை இருந்ததே தெரியாமல் போய்விடும். இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் கடமை நமக்கு உண்டு. நவீன மருத்துவத்தை நாடிச் செல்லாமல் நம்மால் இயன்ற வரை இயற்கை மருத்துவத்தைப் பின்பற்றி ஆரோகியமான வாழ்வை வாழ முயல்வோம்.
எழுதியவர்: சபிதா
Super informative
ReplyDelete