குழாய் எப்போதும் வட்டங்களின் வடிவத்தில் மட்டுமே இருப்பதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஆனால் மற்ற பொருள்கள் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன எடுத்துக்காட்டாக பாட்டில், பெட்டி, வளையல்கள் போன்றவை. குழாய்கள் ஏன் முக்கோணம், சதுரம், பென்டகன் வடிவங்களில் இல்லை?
வட்டங்களைத் தவிர வேறு வடிவங்களில் குழாய்களை உருவாக்கினால், சரியான தண்ணீர் விநியோகத்தை நம்மால் பெற முடியாது. குழாய் உடைந்து விடும் .இந்த குழாயின் வடிவத்தின் பின்னால் சிறிய அறிவியல் உள்ளது.
காரணம் அழுத்தம், வட்டக் குழாயில் எல்லா திசைகளிலிருந்தும் சமமான அழுத்தத்தைக் கொண்டிருக்கும். குழாயின் வடிவம் சதுரமாக இருந்தால் நான்கு மமுடியாதளில் மட்டும் அழுத்தம் அதிகமாக இருக்கும். எனவே குழாய் சேதமடையும், மேலும் நீர் விநியோகத்தை நம்மால் பெற முடியாது.
எழுதியவர்: ஹேமா ராஜீ
Comments
Post a Comment